அம்பானி வீடு இப்படி எரியுதே… பார்த்து பார்த்து கட்டிய 2500 கோடி வீட்டில் பயங்கர தீ..!

உலகமே வியக்கும் வண்ணம் தனி ஒருவருக்காக பிரமாண்டமான அளவில் கட்டப்பட்ட வீட்டிற்கு பெயர் போனது ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு. சுமார் 2500 கோடி செலவில் 27 தளங்களுடன் அமைகப்பட்டுள்ளது. இதில் திரையரங்குகள், நீச்சல் குளம், ஹெலிக்காப்டர் வந்து இறங்கும் வசதி போன்ற எண்ணற்ற ஆடம்பர வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது. இது மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று இரவு 9.10 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 6 தீயணைப்பு படை பிரிவினர் விரைந்துவந்து அவசர கதியில் செயல்பட்டு தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் தாக்கம் குறித்து தலைமை தீயணைப்பு படை அதிகாரி பி.எஸ். ரங்காங்டாலே கூறுகையில், இந்த தீ விபத்தானது பூங்கா அமைக்கப்பட்டுள்ள மாடியில் தான் ஏற்பட்டுள்ளது.மேலும் அந்த தளத்தில் மொபைல் டவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து தீவிபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் ஆராய்ந்து விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Share on Google Plus

About TAMIL SPEED NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment